புலோப்பளை கிழக்கில் வீடொன்று முற்றாக எரிந்து சேதம்

புலோப்பளை கிழக்கில் வீடு ஒன்று தீக்கிரையான சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம், இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தீ விபத்தில் வீட்டில் இருந்த சொத்துக்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

எனினும், வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வீடு எரிந்துகொண்டிருந்த வேளையில், பளை பொலிசார் வீட்டினை உடைத்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

மின் ஒழுக்கு குறித்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாவகச்சேரியில் புகையிரதம் மோதி உயர்தர மாணவன் உயிரிழப்பு

Leave a Reply