
யாழில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 55 இந்திய மீனவர்கள் மீதும் இன்று வரைபடத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட 6 படகுகள் மற்றும் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 2 படகுகளில் பயணித்த மீனவர்களுமாக மொத்தம் 55 தமிழக மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவில் தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரு தினங்களிலும் 56 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட ட்ரோளர் படகுகளின் ஜி.பி.எஸ் வரைபட அடிப்படையில் இன்றைய தினம் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட 56 மீனவர்களில் ஒருவர் சிறுவன் என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டபோதும் இந்த சிறுவனும் 55 கைதிகளுடனேயே தங்கியுள்ளார்.
இதேநேரம் இவ்வாறு கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான படகுகளும் நெடுந்தீவு மற்றும் எழுவைதீவை அண்டிய பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டமை ஜீ.பி.எஸ் வரைபடம் மூலம் உறுதிப்படுத்துகின்றது.





