யால தேசிய பூங்காவில் வாகன சாரதிகள் ‘சண்டோ’வை துன்புறுத்தினார்களா? வீடியோ இணைப்பு

யால தேசிய பூங்காவில் யானையொன்றுக்கு சபாரி வாகனங்களால் இடையூறு விளைவித்த சம்பவமொன்று நேற்று (24) இடம்பெற்றுள்ளது.

குறித்த சபாரி வாகனங்கள் வெளிநாட்டு உள்நாட்டு பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பாதையில், தென்பட்ட யானையை சாரதிகள் துன்புறுத்தினார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சண்டோ என்ற யானையையே வாகன சாரதிகள் துன்புறுத்தியுள்ளனர்

அந்த பாதையில் யானை தென்பட்டதும், அது வழமை போல செல்வதற்காக வாகன சாரதிகள் ஒலிஎழுப்பியுள்ளனர்.

எனினும், யானையின் பாதையை பல வாகனங்கள் மறித்துக்கொண்டு நிற்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக மிகவும் ஆபத்தான சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யானை வாகனத்தை நோக்கி வந்ததும் அதனை துரத்துவதற்காக பட்டாசுகளை வெடிக்கச்செய்வதை காண்பிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply