கொடிகாமம் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு: உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் கலப்பு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை இராணுவம் கைது செய்ய முயன்ற வேளை, அகழ்வில் ஈடுபட்டோர் தப்பிச் செல்ல முயன்ற சமயம் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மீது 6 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

குறித்த உழவு இயந்திரச் சாரதி கைது செய்யப்பட்டபோதும், ஏனையோர் தப்பி ஓடியதாக தெரியவருகின்றது.

இவ்வாறு கைப்பற்றபட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியும் இராணுவத்தினரால் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply