சீன இறக்குமதி அரிசி உற்பத்திக்கு இயற்கை உரம் பயன்படுத்தப்படவில்லை?

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி இயற்கை உரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி இறக்கமதி செய்யப்படவுள்ளமை குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இறக்குமதி செய்யப்படும் அரிசி சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதற்கு உத்தரவாதமளிக்க முடியாது.

பல்வேறு பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரிசி இறக்குமதிக்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

சீனாவில் இருந்து ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் தற்போது பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றார்.

Leave a Reply