இஸ்தான்புல்லில் கடும் பனிப்பொழிவு: மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு

இஸ்தான்புல்லில் அதீத பனிப்பொழிவு காரணமாக வழக்கத்திற்கு மீறி மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை தடைப்பட்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கம் விசேட விதிமுறைகளை விதித்துள்ளது.

துருக்கி நாட்டின் தலைநகரும், நாட்டின் மிகப்பெரிய நகரமுமான இஸ்தான்புல்லில், கடந்த வாரம் நிலம் முழுதும் பனியில் மூடப்பட்டு இருந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்தோடு செவ்வாய்க்கிழமை முதல் மோட்டார் வாகனங்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அநேகமான பிரதேசங்களில் 30 – 50 cm வரையில் பனி படர்ந்துள்ளன.

சில பிரதேசங்களில் 80 cm வரையில் கூட பனி படர்ந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.

விசேடமாக நோய்வாய்ப்படுபவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்காக ஹெலிகாப்டர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply