கொரோனாக்கு ஒப்பான வைரஸ் நாட்டில் பரவுகிறது: ஜி.எம்.ஓ.ஏ. எச்சரிக்கை

கொழும்பு, ஜனவரி 26: கொரோனா வைரஸுக்கு ஒப்பான வைரஸ் ஒன்று நாட்டில் பரவி வருகிறது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (ஜி.எம்.ஓ.ஏ.) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஜி.எம்.ஓ.ஏ. உறுப்பினர் பிரசாத் கொலம்பகே கூறியது:

நாட்டில் கொரோனா வைரஸுக்கு ஒப்பான இன்னொரு வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வைரஸின் பரவலால் நாடு பாரதூரமான சூழலை நோக்கிச் செல்கிறது. இந்த வைரஸ் தொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வைரஸுக்கு கூடுதலாக டெங்கு நோயின் தாக்கமும் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply