இலங்கை மீது மூன்று நாடுகள் வலை வீச்சு – துடிப்பது அரசாங்கம் அல்ல மக்கள்!

அமெரிக்கா, சீனா, இந்தியா வீசிய வலைகளில் இலங்கை தவழுக்கிறது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. அனல் மின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இல்லை. தற்போது கொலன்னாவையில் எரிபொருள் தீர்ந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் கப்பலொன்று வருகிறது என்கிறார்கள். மின்வெட்டு இருக்காது என்கிறார்கள்.

நீர் மின் உற்பத்தியும் நெருக்கடிக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

டொலர் வேண்டாம் என்று ஜனாதிபதி சொன்னவுடன், மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் டாலர் ஆகிவிட்டார். இதற்குப் பின்னால் ஏதோ இருக்கிறது.

காய்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்வதற்கு மாதம் மாதம் அதிக டொலர்கள் செலவாகும்.

இந்த நெருக்கடியால் நாட்டு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

எல்லாவற்றையும் மட்டுப்படுத்துங்கள் என்று இப்போது சொல்லப்படுகிறது. அனைத்தையும் சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று அரசு சொல்கிறது. எல்லாம் கைமீறி விட்டது.

இன்று வெளிநாட்டவர்கள் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் இலங்கைக்கு வருகிறார்கள். அப்போது சுற்றுலாத்துறையை வளர்க்க முடியாது.

இந்தியா, அமெரிக்காவின் வலையில் நாட்டு விழுந்து கொண்டிருக்கிறது. உலக வல்லரசுகள் தங்கள் இஷ்டப்படி ஆட்சி செய்கின்றனர்.

இதற்குப் பின்னால் ஏதோ சதி இருக்கிறது அல்லது அரசாங்கத்தின் இயலாமை இருக்கிறது.

அரசு பணத்தை அச்சடிக்கிறது. அவர்களுக்கு வேறு தீர்வு இல்லை. பணம் அச்சடித்தால் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும்.

நிதி அமைச்சரின் முட்டாள்தனமான முடிவுகள் இவை. ஏழு மூளை இருந்தால் இதுதான் நடக்கும்.

உலகில் பணமோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரேயொரு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மட்டுமே.

இப்போது பிரதமர் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பணம் இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.- என்றார்.

Leave a Reply