மன்னார் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

மன்னார் மாவட்டத்தில் சடுதியாக குறைவடைந்து வந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் விடுத்துள்ள நாளாந்த கொரோனா தொற்று நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பீ.சி.ஆர்.பரிசோதனையின் போது நேற்று                     (வியாழக்கிழமை) புதன்கிழமை மாலை மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை 85 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 3268 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் தற்போது வரை 36 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply