திருக்கோணமலை மண்ணில் இடம்பெற்ற பழமையான ஆலயத்தின் கும்பாபிஷேகம்

திருக்கோணமலை மண்ணில், நீண்ட கால வரலாற்றைக் கொண்ட ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி ஆலய இராஜகோபுரம் அமைக்கப்பட்டு, இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, கும்பாபிஷேகம் நடந்தேறியது.

இதன் போது பாரிய அளவிலான மக்கள் பங்கு கொண்டதுடன், பக்தியுடன் இறையருள் வேண்டி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

எழுத்துமூல ஆவணங்களின் அடிப்படையில் 1815ம் ஆண்டு முதலும், வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் 1505ம் ஆண்டுக்கும் முன்னரான வரலாற்றையும் கொண்ட, பழமை மிக்க ஆலயம் இதுவாகும்.

முதலாவது கும்பாபிஷேகம் – 1829ம் ஆண்டு

இரண்டாவது கும்பாபிஷேகம் – 1894ம் ஆண்டு

மூன்றாவது கும்பாபிஷேகம் – 1909ம் ஆண்டு

நான்காவது கும்பாபிஷேகம் – 1957ம் ஆண்டு

ஐந்தாவது கும்பாபிஷேகம் – 1999ம் ஆண்டு

ஆறாவது கும்பாபிஷேகம் – 2022ம் ஆண்டு

என நீண்ட வரலாற்றை கொண்ட ஆலயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது .

Leave a Reply