இலங்கை வந்தடைந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர்

துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் Mevlüt Çavuşoğlu ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இன்று காலை 6 மணியளவில் துருக்கியில் இருந்து விசேட விமானம் மூலம் வருகை தந்த குழுவினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, துருக்கிய தூதுவர் குழுவை கட்டுநாயக்க விமான நிலைலயத்தில் வரவேற்றார்.

துருக்கி வெளிவிவகார அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட உள்ளனர்.

இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களும் தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களும் உயர்மட்டக் கூட்டங்களில் விவாதிக்கப்படும் என்று துருக்கிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply