இலங்கையினை வந்தடைந்தார் துருக்கி வெளிவிவகார அமைச்சர்!

<!–

இலங்கையினை வந்தடைந்தார் துருக்கி வெளிவிவகார அமைச்சர்! – Athavan News

துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையினை வந்தடைந்துள்ளனர்.

துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான துருக்கிய தூதுவர் ஆகியோர் குறித்த குழுவினரை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.


Leave a Reply