இலங்கை அமைச்சர்கள் சுயநலவாதிகள்! – எதிர்க்கட்சி சாடல்

நாட்டில் உள்ள அமைச்சர்கள் சுயநல போக்கில் இருக்கின்றனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உண்மையில் எனது மனசாட்சியின்படி கூற வேண்டும் என்றால் நாட்டில் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் பற்றியான நம்பிக்கை தற்போது உடைந்துள்ளது.

ஏனென்றால் அதிகமானவர்கள் தமது விருப்பங்களிற்கு ஏற்ப, தமது சுயநலத்திற்கு நடந்கொள்கின்றனர்.

எனவே நம்பிக்கை தன்மை என்பது தற்போது இல்லை. ஆனால் தமது மனசாட்சி ஏற்ப நடக்கும் அமைச்சர்களும் சிலரும் உள்ளனர்.

உண்மையில் நம் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார பிரச்சினை என்பது சிக்கலான விடயம்.

நாட்டை முழுமைப்படுத்த சிறந்த தலைவர் அவசியம். ஜனாதிபதி மற்றும் அரசாங்க நடுநிலையாக செயல்படுகிறதா என்று நான் கேற்கின்றேன்.

ஏனெனில் ஜனாதிபதி கூறுகிறார் எதிர்க்கட்சியின் ஆதரவு நமக்கு அவசியம் என்று. அன்று கொரோனா வந்த தொடக்கத்தில் சஜித் பிரமதாச ஆதரவு தாருங்கள் என்று ஜனாதிபதி கூறும் போது, அவர் நான் ஆதரவு தருகிறேன்.

நாங்கள் எங்களுடைய சார்பில் உதவிகள் வழங்குகின்றோம். தாங்கள் தங்களுடைய தீர்வுகளை கையாளுங்கள் என்று.

டொலர் பற்றாக்குறை அதனால் அனைத்து பொருட்களிற்கும் வரிசையில் மக்களுக்கு பாரிய சிக்கலாக உள்ளது. மக்களின் அன்றாட செலவு அதிகரித்துள்ளது. இதற்கான தீர்வு அரசாங்கம் எடுக்கவில்லை.

உண்மையில் இலங்கையில் பொருளாதாரம் 2019 சிறப்பாக காணப்பட்டது. அப்போது டொலர் பிரமானம் காணப்பட்டது.

மற்றும் கொரோனாவால் நாடு வீழ்ச்சி அடைந்தது தான் அதிலிருந்து மீண்டுவர வேண்டும். இதற்கு என்ன தீர்வு முதலில் டொலர் பற்றாக்குறை நீக்க வேண்டும். – என்றார்.

புதிய தொழிற்துறைகளை வளர்த்தெடுப்பதனூடாகவே வறுமை நிலையை தீர்க்க முடியும்! – அங்கஜன்

Leave a Reply