கொரோனா நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அம்புலன்ஸ் சாரதியை தாக்கிய வைத்தியர்?

கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த சுவசரிய அம்புலன்ஸ் சேவையின் சாரதி ஒருவரை கெக்கிராவ வைத்தியசாலையின் மருத்துவரும் சிற்றூழியர் ஒருவரும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் அம்புலன்ஸ் சாரதி முறைப்பாடு செய்ததன் பின் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பாடசாலையின் அதிபர் அதிரடி கைது!

Leave a Reply