இறப்பு வீதத்தை அதிகரிக்கும் NeoCov வைரஸ் திரிபு கண்டுபிடிப்பு! – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

உலகமே தற்போது கொரோனாத் தொற்றுநோய்க்கு எதிராக போராடி வரும் நிலையில், வுஹானைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் குழு NeoCov என்ற புதிய கொரோனா வைரஸ் பரவுவதாகவும், இது அதிக தொற்று விகிதத்துடன் மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் மற்றும் பல ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி,

NeoCov மாறுபாடு தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது சுவாச நோய் அறிகுறியான MERS-COV உடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

இருப்பினும், NeoCov புதிய வைரஸ் இல்லை, ஏனெனில் இது மத்திய கிழக்கு நாடுகளில் 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது என ஆய்வுகள் தெரிவிகின்றன.

குறித்த வைரஸ் வெளவால்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைரஸ் பாதித்த மூவரில் ஒருவருக்கு இறப்பு ஏற்படும் என வுஹான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply