தெல்லிப்பழையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Man in handcuffs behind his back

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் 5 கிராம் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெல்லிப்பழை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் ஹெரோயினை எடுத்துச் செல்லும் போதே சுன்னாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளையதினம் யாழ். உச்ச நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விடுதலை புலிகளின் தலைவர் காயப்பட்டதும், தனிமைப்படுத்தப்பட்டதும் இதுவரை யாருக்கும் தெரியாது! சிவாஜி எம்.பி. தெரிவிப்பு

Leave a Reply