நீதிக்கான தேடலால் மைதானத்தில் மாணவர்!

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடத்தப்பட்டதால், கற்றல் நடவடிக்கைக்காக வந்த மாணவர்கள் மைதானத்தில் காத்திருக்க நேர்ந்துள்ளது.

நீதி அமைச்சின் “நீதிக்கான தேடல்” நடமாடும் சேவை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது. பாடசாலை நாளான நேற்று இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் மாணவர்களின் வகுப்பறைக் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் தடைப்பட்டதால் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் காக்க வைக்கப்படிருந்ததை அவதானிக்க முடிந்தது.

Leave a Reply