ஏழு மாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன்

கொழும்பு – பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது.

பம்பலப்பிட்டி கிரெஸ்டர் பகுதியில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து குறித்த சிறுவன் தவறி விழுந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 15 வயதான சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சிறுவனின் தந்தை வெள்ளவத்தையில் பிரபல வர்த்தகர் ஆவார்.

உயிரிழந்த சிறுவன் அதே பகுதியில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

போராடினால் தீர்வு கிடைக்காது; எம்முடன் பேசினால் மட்டுமே தீர்வை பெறமுடியும்! காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அலி சப்ரி கருத்து

Leave a Reply