யாழ் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை இழுத்து மூடப்பட்டது!

யாழ் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது.

யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளர் ஒருவர் மற்றும் 10 மாணவர்களுக்கும் தொற்று உறுதியானது.

இந்த நிலையில் வரும் திங்கள் கிழமை தொடக்கம் எதிர்வரும் 6ம் திகதிவரை கலாசாலை முடக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றின் பாதகமான நிலையினை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் குறித்த நாட்களில் அலுவலக செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும்.

கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இணையவழி ஊடாக இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

வேகக்கட்டுப்பாட்டையிழந்த கார் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

Leave a Reply