
இலங்கை அரசாங்கத்தின் சட்ட மறுசீரமைப்புக்கான முயற்சிகள் குறித்து ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் கரிசனை வெளியிட்டுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவற்றிலுள்ள குறைபாடுகளை அடையாளம் காண்பதற்கும் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அவர் டுவிட்டர் பதிவொன்றில் வலியுறுத்தியுள்ளார்.






