வங்குரோத்து அடைந்துள்ள அரசு! ஜே.வி.பி சாடல்

அரசாங்கம் வங்குரோத்து அடைந்துள்ளது என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தண்ணீரை குறைவாக குடிக்குமாறு அமைச்சர்கள் கோருகின்றனர். வேலை செய்ய வேண்டுமாயின் சைக்கிளில் செல்லுமாறு கூறுகின்றனர். அமைச்சர்கள் இதனையே கோருகின்றனர்.

மின்சாரத்தை குறைந்தளவு நுகருமாறு கோருகின்றனர். டொலர்களை குறைவாக பயன்படுத்துமாறு கோருகின்றனர்.

தற்பொழுது எரிபொருளையும் குறைவாக பயன்படுத்துமாறு கோருகின்றனர். முடிந்தால் நடந்து செல்லுமாறும் அல்லது சைக்கிளில் செல்லுமாறு கோருகின்றனர்.

இந்த நிலைக்கு தற்போதைய அரசாங்கம் வங்குரோத்து அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சாப்பாட்டு பார்சல்களின் விலை திடீர் அதிகரிப்பு!

Leave a Reply