கிளிநொச்சியில் இரத்ததான முகாம்

கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த இரத்ததான முகாம் கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் குமார் பார்த்தீபன் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த இரத்ததான முகாமில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு குருதி கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply