சிறை வைக்கப்படுவோம் என்று தெரிந்தும் யாரவது எல்லை தாண்டி மீன் பிடிப்பார்களாக? – செந்தில் தொண்டமான் கேள்வி

இந்தியா எங்கள் நண்பன், அதிக உதவிகளை இங்கே செய்துள்ளனர். ஆகவே மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளை நாம் சரியான முறையில் அணுகி தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முக்கியஸ்தரும், பெருந்தோட்டங்களுக்கான, பிரதமரின் இணைப்புச் செயலருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்,

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறையில் அடைக்கப்படுவோம், உடமைகள் அரசுடைமையாக்கப்படும் என்று தெரிந்தும் அவர்கள் இங்கே வந்து மீன்பிடிக்க மாட்டார்கள் என நான் நினைக்கின்றேன். எடுத்த எடுப்பில் சில விடயங்களை நாம் செய்ய முடியாது.

அவர்களை சிறைபிடித்து நீண்டகாலம் வைத்திருக்கவோ முடியாது. இந்தியாவுடன் நாம் நீண்ட காலமாக நற்புறவை பேணி வருகின்றோம்.

இலங்கை அகதிகள் பலருக்கும் அங்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். அதேபோன்று சுமார் 50 ஆயிரம் வீடுகள் வரையில் அமைத்து கொடுத்துள்ளனர்.

இரண்டு நாடுகள் நட்பு ரீதியாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினை இது. எமக்கு பல கோடி ரூபாய்களில் உதவும் அவர்களுக்கு, சிறை வைக்கப்படும் படகுகள் பெரிய விடயம் அல்ல.- என்றார்.

ஜனவரி மாதத்தில் மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

Leave a Reply