மக்கள் பணியாற்ற அதிகாரத்துக்கு வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை: சஜித் பிரேமதாச

பொலநறுவை, ஜனவரி 31:

மக்கள் பணியாற்ற அதிகாரத்துக்கு வரும் வரை காத்திருக்க வேண்டிய தேவை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயக் கொள்கை, பொலன்னறுவையில் வார இறுதியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சஜித் பிரேமதாசா பேசியது:

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இல்லாதபோதும், பல மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இக்கட்சியின், கிராமப்புற மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் ‘ஹஸ்மா’ திட்டத்துக்கும், கிராமப்புற பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் ‘சக்வாலா’ திட்டத்திற்கும் வெளிநாட்டு உதவி கிடைத்துள்ளது.

இலங்கை வரலாற்றில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து எதிர்க்கட்சியொன்றுக்கு உதவி கிடைத்துள்ளது இதுவே முதல் தடவையாகும்.

எனவே, ஆட்சி அதிகாரத்துக்கு வந்துதான் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் காத்திருக்கத் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply