
யாழ்.பண்ணை பகுதியில் பயணித்த காரொன்று விபத்துக்குள்ளானதில், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காரில் பயணித்த மூவரில், ஒருவரின் நிலை மிக மோசமாக இருந்ததாகவும், அவர் உடனடியாக வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.





