அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலையானார் பசில்

அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், வழக்கொன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(01) பிறப்பித்துள்ளது.

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில், திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2 கோடியே 94 லட்சம் ரூபா நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாக கூறி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ மற்றும் அந்த திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முகத்துடனான துண்டு பிரசுரங்களை அச்சிட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து பஷில் ராஜபக்ஸ மற்றும் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply