யாழ்.குடாநாட்டை நாளை மாபெரும் போராட்டத்தால் முடக்க தயாரான மீனவர் சமாசம் அமைப்பு!

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைய தினம் மாபெரும் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் சமாசங்களின் அழைப்பின் பிரகாரம், யாழ்ப்பாண மாவட்ட பிரதான வீதிகளை முடக்கி நாளை போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தப்போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply