
யாழில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் சேவை வழங்குவது தொடர்பில் வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்களின் முடிவின்றி தனிப்பட்டவர்கள் முடிவுகளை எடுக்கக் கூடாது என ஸ்ரீ லங்கா தேசிய சுதந்திர போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வேண்டுகோள் விடுத்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு தனியான பேருந்து நிலையம் காணப்படுகிறது.
புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையம் தனியாருக்காகவே அமைக்கப்பட்டது. ஏனெனில், அவர்கள் பேருந்து தரிப்பிடம் இன்றி வீதிகளில் நிற்கிறார்கள்.
இந்த வாரம் யாழ் ஊடக அமையத்தில் புதிய பேருந்து நிலையத்தில் சேவையை வழங்குவதற்குவது தொடர்பில் பதிவு செய்யப்படாத தொழிற்சங்கம் ஒன்று கருத்து வெளியிட்டதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
புதிய பேருந்து நிலையத்தை பிரித்து தந்தால் சேவையில் ஈடுபடுவோம் என தொழிற்சங்கங்களால் கருத்து முன்வைக்கப்படவில்லை.
இவ்வாறு கருத்து தெரிவித்தவர்கள் அரசியல் கட்சி ஒன்றை பயன்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அது ஒட்டுமொத்த தொழிற்சங்கத்தின் கருத்து அல்ல.
தனியாருடன் இணைந்து சேவையை வழங்குவதில் பல பிரச்சினைகள் காணப்படும் நிலையில், இது தொடர்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
கொழும்பில் அரச பேருந்து தனியான சேவையை வழங்கி வருகின்றது. இங்கு மட்டும் இந்த சேவையை வழங்குவது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் 54 ஆசனங்களை கொண்ட பேருந்துகள் நான்கு நிறுத்த முடியாது.
குறித்த விடயம் தொடர்பில் சகல தொழிற்சங்கங்களும் அடைந்து யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவரை சந்திப்பதற்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வடமாகாண பிரதம பிராந்திய முகாமையாளர் அங்கயன் இராமநாதன் எச்சரித்தமை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தொழிற்சங்கத்தினர் சில விடயங்கள் அபிவிருத்திக்குழு தலைவரின் கவனத்திற்கு செல்லாhததன் காரணமாக சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கலாம்.
எனினும் அங்கஜன் இராமநாதனும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து புரிந்துணர்வு அடிப்படையில் பல விடயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலர் அவரின் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் என்ற பெயரில் சில முடிவுகளை எடுக்க பார்க்கிறார்கள். – என அவர் மேலும் தெரிவித்தார்.





