முல்லைத்தீவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Man in handcuffs behind his back

முல்லைத்தீவு – செம்மலை வீதியில் வைத்து ஒரு கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவரை இன்று காலை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் முல்லைத்தீவு மாத்தளன் சாலைப் பகுதியில் கடற்தொழில் செய்பவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஒரு கிலோ கிராம் எடைகொண்ட கஞ்சா பொதியினை முல்லைத்தீவு மாஞ்சோலை பகுதியிலிருந்து திருகோணமலைக்கு உந்துருளியில் கொண்டு சென்ற வேளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய செம்மலைப்பகுதியில் சந்தேகத்தில் மறித்துச் சோதனைசெய்த போது கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கஞ்சா பொதியும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply