பாடசாலையில் திடீரென நினைவிழந்து விழுந்த ஐந்து மாணவிகள்

பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவை சென்.மேரிஸ் மத்திய கல்லூரியில் பைசர் தடுப்பூசி ஏற்றிகொண்ட 05 மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் இன்று (02) புதன்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பொகவந்தலாவை சென்.மேரீஸ் மத்திய கல்லூரி மற்றும் ஹொலி ரோசரி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுவருகின்ற 12 வயது தொடக்கம் 16வயது வரையான மாணவர்களுக்கு இன்று காலை முதல் பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இதன் போது 2000 ம் மாணவர்களுக்கு பைசர் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டது.

அதில் ஐந்து மாணவிகள் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply