இலங்கை அரசுக்கு எதிராக மாறியது வடக்கு மீனவர்கள் போராட்டம்

யாழில் மீனவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம், இன்றிலிருந்து இலங்கை அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்றம் பெறுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் ஏ.9 வீதியை மறித்து இன்று காலை முதல் மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்து மீறலுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் சமூகம் மீடியாவுக்கு மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இது வரை காலமும் இந்திய மீனவர்களின் அத்து மீறலுக்கு எதிராக தீர்வு வேண்டியே போராடினோம்.

ஆனால் இனி இலங்கை அரசுக்கு எதிராக போராடவுள்ளோம்.88 சங்கங்கள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளன.

ஏனென்றால், வெளிநாட்டு படகுகளை ஒழுங்கு படுத்தும் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு, அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறித்த சட்டத்தை நடைமுறை படுத்தினாலே எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

ஆகவே சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிக்கும் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டமாக இது தற்போது மாற்றம் அடைந்துள்ளது என்றனர்.

Leave a Reply