நாளை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மக்கள் எழுச்சிப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு

இலங்கையின் நாளைய சுதந்திரம் மக்கள் எழுச்சி போராட்டமாகவும், கரி நாளாகவும் அமைய வேண்டும் என
யாழ் மாவட் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

எமது உறவுகளை தொலைத்து விட்டோம், வருட கணக்கில் போராடி வருகின்றோம்.இதுவரை எமக்கு தீர்வு கிடைக்கவில்லை.ஒரு நாட்டில் உள்ள எல்லா இனங்களும் சந்தோசமாக வாழ்ந்தால் மட்டுமே அது சுதந்திரம் அடைந்த நாடாக இருக்கும்.

ஆனால் தமிழ் மக்கள் இன்று வரை கண்ணீரிலே உள்ளனர்.எம்மை கொன்றவர்கள் நாளை குதூகலமாக நாளை கும்மாளம் அடிக்கவுள்ளனர்.

அந்த நாளை நாம் கரிநாளாக அனுஸ்ட்டிக்க வேண்டும்.இதற்கு சமூக அமைப்புக்கள்,மாணவர்கள்,பொது அமைப்புக்கள் என அனைவரும் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் நாளை காலை ஒன்றுகூட வேண்டும்.

எம் இன அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்காலிலே எமது எழுச்சி போராட்டம் ஆரம்பமாக வேண்டும்.அரசியல் பேதம் இல்லாமல் நாம் ஒன்று சேர வேண்டும்.

தினமும் போராட்டம் நடைபெறும் ஒரே ஒரு நாடு இலங்கை மட்டுமே.எங்கு எமது இனம் அழிக்கப்பட்டதோ அங்கிருந்தே எமது போராட்டம் ஆரம்பம் என தெரிவித்துள்ளனர்.

மாதகலில் வலுக்கிறது மீனவர்கள் போராட்டம் – வலைகள், படகுகள் வீதியில் குவிப்பு!

Leave a Reply