மருத்துவ பீட மாணவர்கள் விவகாரம் – இராஜாங்க அமைச்சரின் மகன் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 7 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் நேற்று இரவு பொலிஸில் சரணடைந்தமையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீப் ரக வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply