இலங்கையில் பெண்களும் அதிகமாக போதைப்பொருள் பயன்படுகின்றனர்! – ஞானசார தேரர்

நாட்டில் தற்போது ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளர்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் செய்திகளிற்கு செவி சாய்த்தால், நன்கு தெரியக்கூடிய விடயம் போதைப்பொருளாகும். இப் போதைப் பொருட்களால் பாதிக்கப்படுவது சிறுவர்களே.

நாம் பல விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கினறோம். அவ்வாறு இருக்கையில் போதை பொருள் பிரச்சினை இப்போது பெரிதாக மாறிவிட்டது.

பணம் மாத்திரமே வாழ்க்கை என்றவாறு மக்கள் வாழ்கின்றனர். சிறுவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை.

ஆண் பிள்ளைகள் மட்டுமல்ல, பெண் பிள்ளைகளும் இப் போதை பொருள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதை பற்றி நாம் கண்டிப்பாக பேச வேண்டும். – என்றார்.

Leave a Reply