அர்ஜென்டினாவில் கலப்பட போதைப் பொருள் பயன்படுத்திய 20 பேர் பலி

புவெனஸ் ஐரிஸ், பெப் 4:

அர்ஜென்டினாவில் எட்டு மாகாணங்களில் கலப்படம் செய்யப்பட்ட கொகைன் போதைப்பொருளை பயன்படுத்தியதால் ஏற்பட்ட உயிரிழப்பு 20-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 74 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து போதைப்பொருள் விற்பனை செய்ததாக சந்தேகித்த ஒரு கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோகைனில் கலக்கப்பட்ட பொருள் என்னவென்று இன்னும் தெரியாததால், இறப்புகளைத் தடுக்க அவசர சேவைகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகம் பணியாற்றி வருகிறது.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் தொடர்ந்து இறந்து வருவதால் சமீபத்தில் வாங்கிய எந்த போதைப்பொருள்களையும் பயன்படுத்த வேண்டாமென்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

பிற கும்பலுடனான போட்டியின் காரணமாக கொகைனில் சில பொருட்களை கலந்து, அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply