தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு 75வயது மூதாட்டி வேட்பு மனு தாக்கல்

மயிலாடுதுறை நகராட்சியில் , நாம் தமிழர் கட்சி சார்பில் 75வயது மூதாட்டி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற உள்ளது.

இதனை அடுத்து மயிலாடுதுறை‌ மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி உள்ளனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 23 வார்டுகளில் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

17-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் 75 வயது மூதாட்டி சொர்னாம்பால் என்பவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் நோக்கத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த விடயம் அனைவரையும்‌ ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளது‌. மேலும் முன்னதாக மனுத்தாக்கல் செய்ய வரும்போது கரும்புகளை வேட்புமனு தாரர்கள் கைகளில் எடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply