நமக்கு இரண்டு சுதந்திரம் அவசியம்! பேராசிரியர் சந்திம விஜயகுணவர்த்தன

நமக்கு இரண்டு சுதந்திரம் அவசியம் என பேராசிரியர் சந்திம விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் முக்கிய நாளாகும் இன்றாகும். அதாவது மக்கள் அனைவரும் 74 வது சுதந்திர தினம் கொண்டாடுகிறார்கள்.

74 ஆண்டுகள் என்பது சிறிய காலம் அல்ல .

நம் நாடு 1948ம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது.

அவர்களிடம் இருந்து நாம் பல வரப்பிரசாதங்களை பெற்றோம்.

அதாவது முக்கிய மொழியில் ஒன்றான ஆங்கில மொழியும், அவர்களின் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள், வங்கி கணக்கு பரிமாற்றங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

எனினும், நாட்டில் உள்ள வளங்களை விற்பனை செய்தும் தம் வயலில் நெற் பயிர்களின் விளைச்சலைப் பெற முடியாத நாடாக உள்ளோம்.

நான் எண்ணுவது நமக்கு இரண்டு சுதந்திரம் அவசியம் என்று, ஒன்று ஏற்கனவே இருந்தது போல திரைக்கு பின்னால் இருந்து செயற்படும் ஆங்கிலேயர்கள்.

மற்றையது 74 ஆண்டுகளாக சுதந்திர கிடைத்தது என்று எண்ணும் சுதந்திரம்.

அதாவது இவற்றில் இருந்து விளங்குவது நாட்டில் மீண்டும் பாதுகாப்பற்ற தன்மை உள்ளது- என்றார்.

Leave a Reply