தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளை எரித்து பல பிரதேசங்களிலும் போராட்டம்

திருகோணமலை பாடசாலை விவகாரத்தில் போலிசெய்திகளை தொடர்ந்தும் வெளியிட்டு வருவதாக தெரிவித்து, தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளை எரித்து பல பிரதேசங்களிலும் “கிழக்கின் கேடயம்” அமைப்பினர் தனது எதிர்ப்பை வெளியிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இதுவிடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருகோணமலை பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைக்கு நடந்த அநீதியை முற்றாக மறைத்து தாக்கியவரை அப்பாவி போன்றும், தாக்கப்பட்டவரை தாக்கியவராகவும் செய்தி வெளியிட்டதுடன் நடக்காத பல சம்பவங்களை நடந்ததாக பொய்யான செய்திகளை வெளியிட்டிருந்ததாக கூறியே தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளை “கிழக்கின் கேடயம்” அமைப்பினர் எரித்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டினார்.

சமூகவலைத்தளங்களிலும், முஸ்லிம் சமூகத்தாரிடமும் பலத்த கண்டனங்களை பெற்றுவரும் தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகள் தொடர்ந்தும் போலியான பக்கசார்பான செய்திகளை வெளியிட கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்களின் பக்க நியாயத்தை கேட்காமல் செய்தியை பிரசுரித்த பத்திரிகைகள் தமது தவறை உணர்ந்து பகிரங்க மன்னிப்புக்கோரவேண்டும் என்றும் “கிழக்கின் கேடயம்” அமைப்பினர் இதன்போது காணொளியூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Leave a Reply