தெஹிவளையில் 18 வயது இளைஞர் கொலை!

கொழும்பின் புறநகர் தெஹிவளையில் 18 வயதான இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்தார்.

முரண்பாடு காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலையாளி பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருப்புக்காக அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை!

Leave a Reply