பயங்கரவாதத் தடைச்சட்டம் வேண்டாம்! நாடளாவிய ரீதியில் கையெழுத்து போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

பயங்கரவாத திருத்தச் சட்டத்தில் எந்தவித சீர்திருத்தமும் இடம்பெறவில்லையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் கையெழுத்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தியால் பாழடைந்த வீதி: சங்கானை மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

Leave a Reply