நாட்டை நிர்வகிக்க சஜித்தால் முடியாது! – டயானா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

கம்பளையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா மகளிர் அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் குறித்து அரசியல் மட்டத்தில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

நான் வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைக் கூட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது. இந்நிலையில் அவரால் எவ்வாறு நாட்டைப் பாதுகாக்க முடியும்.

முட்டாள்தனமான யோசனைகளால் ஐக்கிய மக்கள் சக்தி தற்போது ஐந்தாக பிளவடைந்துள்ளது. கட்சியின் பெயரில் மாத்திரமே ஐக்கியம் உள்ளது.

உண்மையில் கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. கட்சியைச் சீர் செய்ய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

இதேவேளை, அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கவே தற்போது திட்டமிட்ட வகையில் மின்விநியோகத் துண்டிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டு ஆவணத்தில் இருந்து விலகியமைக்கு தமிழரசு கட்சிதான் காரணம்! – மனோ குற்றச்சாட்டு

Leave a Reply