கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2 ஆயிரத்து 437 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ளதுடன், 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில், 2 இலட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 66 ஆயிரத்து 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.

க.பொ.த உயர்தர பரீட்சார்த்திகள் உரிய அடையாள ஆவணங்களுடன், காலை 7.45 மணிக்கு முன்னர் பரீட்சை மண்டபத்துக்கு பிரவேசிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply