மன்னார் மாவட்டத்தில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 5 நாட்களில் மாவட்டத்தில் 197 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் மாவட்டத்தில்  கடந்த  (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையின் போது மேலும் புதிதாக 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களில் 197 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் 398 கொரோனா தொற்றாளர்களும் மாவட்டத்தில் தற்போது வரை 3581 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 36 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply