தேசிய பொருளாதாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது! கம்மன்பில

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வலுசக்தித் துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ‘தேசிய கைத்தொழில் கண்காட்சி’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சீனா, இந்தியா மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் குறுகிய கால அடிப்படையில் கடன்பெறுவதால் மாத்திரம் பொருளாதாரத்தை சீர்செய்ய முடியாது.

பொருளாதார நிலைமை குறித்து நாட்டு மக்களுக்குப் பொய்யுரைக்காமல் உண்மையை குறிப்பிட வேண்டும்.

நாட்டின் தேசிய வருமானத்திற்கும், அரச செலவிற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது. இந்த இடைவெளி கொரோனாத் தாக்கத்தை தொடர்ந்து தீவிரமடைந்தால் 5 வருடத்திற்கு பின்னர் ஏற்பட வேண்டிய பொருளாதார பாதிப்பு கொரோனாத் தாக்கத்தை தொடர்ந்து முன்கூட்டியதாக ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்திடம் நிதி இல்லை. நாட்டில் டொலர் இல்லை என்பதே தற்போதைய உண்மை. தேசிய வருமானத்திற்கும் அரச செலவிற்கும் இடையில் 4 பில்லியன் அளவு இடைவெளி காணப்படுகின்றது.

கொரோனாத் தாக்கத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுபவர்கள் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே நெருக்கடியை சீர்செய்யலாம்.

அரசாங்கம் பாரிய வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடியில் ஹரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!

Leave a Reply