
எரிபொருள் விலையேற்றம் என்பது கடற்றொழிலாளர்களையே நேரடியாக பாதிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் சொல்லொனா துயரங்களை எதிர்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மனசாட்சி இன்றி செயற்படுகின்றது.
லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலையை அதிகரித்தது, மற்றைய நிறுவனங்களும் விலைகளை அதிகரிப்பதற்கான ஆரம்பமாகும்.
இந்த எரிபொருள் விலையேற்றமானது எனது பகுதியில் அமைந்துள்ள கடற்றொழிலாளர்களையே பெரிதும் பாதித்துள்ளது.
கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படும்போது அது ஏனைய துறைசார்ந்தவர்களுக்கும் பாதிப்பாக அமையும்.- என்றார்.





