குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிதான் ஆட்சியிலிருந்தபோது தாக்குதலை தடுக்கவில்லை! வியாழேந்திரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலம் தொடக்கம் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் இன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் எதிர்க்கட்சிதான் அன்று ஆட்சியிலிருந்தபோதும் தெரிந்திருந்தும் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் உட்பட ஆறு பேர் மீதான வழக்கு ஏப்ரல் 04ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியின் தலை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த வியாழேந்திரன் உட்பட ஆறு பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கினை ஏப்ரல் 04ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply