பணக்கார ஆண்களை குறிவைத்து 28 வயதில் 8 ஆண்களுடன் திருமணம்! பரபரப்பை ஏற்படுத்திய பெண்

இந்தியாவில் பெண் ஒருவர் 28 வயதில் 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் வசித்து வருபவர் 28 வயதுடைய ஊர்மிளா அஹிர்வார்.

இவர் பணக்கார ஆண்களை குறி வைத்து ஆசை வார்த்தையில் பேசி பல ஆண்களை தனது வலையில் சிக்க வைத்துள்ளார்.

ஊர்மிளா என்ற பெயரில் மட்டுமல்லாமல் ரேணு ராஜ்புத் என்ற மறுபெயரிலும் அதிகப்படியான ஆண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, காதல் பெயரில் ஆண்களை வசியம் செய்து அவர்களை திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் கழித்து அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடி கொண்டு ஓடுவதையே குறித்த பெண் தனது தொழிலாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், அந்தந்த பகுதி பொலிஸாருக்கு சிலர் ஒரே பெயர் மீது புகார் அளித்து வந்துள்ளனர். அந்த புகார்களை கவனித்த பொலிஸார் அதிகாரிகள் ஊர்மிளா அஹிர்வார் மீதான புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஊர்மிளா மீண்டும் சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் படேல் என்பவரை 8 ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இளம் பெண் ஒருவர் இவ்வாறு மோசடி செய்துள்ள சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply