திருமலை பகுதியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துளசிபுரம் பகுதியில் நேற்று எரிவாயு அடுப்பு வெடித்ததில் வீடு சேதமடைந்து.

துளசிபுரம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலே புதிய எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. வீட்டின் மேல்பகுதியும் சேதமடைந்துள்ளது.

உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்த உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொது மக்களுக்கு பால்மா போதை! – திலும் குற்றச்சாட்டு

Leave a Reply