
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் இடையிலான சந்திப்பு பிற்போனமைக்குக் காரணம் கொரோனா தொற்றுப் பரவலே என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இரு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நேற்று முன்தினம் இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், தமிழருக்கான விடயங்களை உறுதி செய்வதற்கு அதிகாரப் பரவல் மிக முக்கியமானது என்றும் வெளிவிவகார அமைச்சர் அழுத்தமாகத் தெரிவித்தார் என அவரின் அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





