
கம்பஹா, பெப் 9: கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனால், கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஏகல, கொட்டுகொட, உடம்மித்த, ரஜ மாவத்தை, வஹட்டியகம, தெலத்துர, கட்டுநாயக்க, சீதுவ, உடுகம்பொல மற்றும் மினுவாகொட பகுதி, கட்டுநாயக்க விமானப்படை தளம், சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் கட்டான தெற்கு ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்படும்.
புதன்கிழமை 4.00 மணி முதல் வியாழக்கிழமை காலை 6.00 மணிவரை நீர் வெட்டு இருக்கும்.
ஜா-எல வீதியில் நீர் விநியோக முறையை மேம்படுத்துவதற்காக, இந்த நீர் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.





